சனி, மே 16, 2009

எல்லாம் காதலினால்...

உன் நினைவுகளை சுமந்த படி தான்

எப்பொழுதும் என் இதயம்..
உன் அன்பு பேச்சுக்களை மட்டுமல்ல‌

உன் கோப வார்த்தைகளையும் தான்

ரசிக்கிறது என் மனது...


இப்பொழுதே கனவு கான ஆரம்பித்து விடுகிறேன்

உன்னை எப்படியெல்லாம் பெரிய ஆள் ஆக்க

வேண்டுமென்று!
உன் சிரிப்பு

உன் கோபம்

உன் பாசம்

உன் பந்தம்

ஐயோ உன்னை முழுவதுமாக பிடித்து போகின்றதே


எனக்குநீ ஒவ்வொரு முறையும் என்னவென்று கேட்கும்

போதெல்லாம் எனக்கு மறந்து போய் விடுகின்றது

நான் என்னவெல்லாம் உன்னிடம் பேச வேண்டுமென்று ?எப்பொழுதும் உன்னிடம் மட்டும் தான்

பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்று அழிச்சாட்டியம்

பண்ணும் மனதை நான் என்ன செய்வது?

எல்லாவற்றையும் உன்னிடம் தான் சொல்ல வேண்டும்துடிக்கிறது என் இதயம்...