வெள்ளி, ஜூன் 19, 2009

எனக்கென்றொரு தேவதை...
உன் வாசம் வீசும் பாதையில் தான்

என் சுவாசம் செல்ல துடிக்கின்றது...

ஒரு நொடிப் பொழுது கூட எனக்கு வேண்டாம்

உன் கண்ணிமைப் பொழுதென்றை தவிர‌...

வாழத்துடிக்கிறேன் இல்லையேல் செத்து போகிறேன்

உன் காதல் கடலில்...

த‌ங்க‌த்தை விட‌ வைர‌ம் விலை உயர்ந்த‌தாமே

யார‌டி சொன்னார்க‌ள் உன் பெருமை

அறியாதவர்கள்...எவ் ந‌கையும் சிற‌க்க‌வில்லைய‌டி என‌க்கு

உன் புன்னகையை தவிர‌...

வியாழன், ஜூன் 18, 2009

மதம் (இது யானைக்கு பிடிப்பது)


அன்பே சிவம் அருள் உரைத்தார் ஆதி சிவன்


உன்னைப் போல் உன் அயலவனையும் நேசி வாழ்ந்து காட்டினார் இயேசு பிரான்


அயலவன் பசித்திருக்க நீ உணவருந்தாதே மொழிந்து சென்றார் நபிகள் நாயகம்


உயிர்களை கொல்லாதே போதனை செய்தார் கொளதம புத்தர்
1992 ஒக்டோபர் 6 பாபர் மசூதி இடிப்பு. கலவர பூமியாக மாறிப் போனது இந்திய பூமி. மத ஒற்றுமையும் மனிதநேயமும் அற்றுப் போன கறுப்புநாள்.


நைஜீரியாவில் கிறீஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் நடந்த மதக் கலவரத்தில் 420 க்கும் அதிகமானோர் பலி.


குஜராத் மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பலி ,50 க்கும் மேற்பட்ட அப்பாவி ராமபக்தர்கள் பலி.பெளத்தநாடென்று கூறிக்கொண்டு நாய் பூனைகள் போன்று பொதுமக்கள் படுகொலை.புரிய‌வில்லை என‌க்கு ஒன்றும்...