கிறுக்க‌ல்க‌ள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிறுக்க‌ல்க‌ள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, அக்டோபர் 11, 2009

பறக்க எனக்கும் ஆசைதான்!












பறக்க எனக்கும் ஆசைதான்,
ஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட குருவி!



எம்பிக் குதித்து வானத்தில் பற்ந்து
வட்ட மிட்டு வலம் வந்து
பின் தரையை நோக்கி விழுந்து
மரக்கிளைகளில் தாவி அங்கும் இங்கும் ஓடி
அலைந்து மழையில் நனைந்து
கும்மாளம் அடித்து குதூகலித்து
பின் மீண்டும் பறக்க எனக்கும ஆசை தான்
ஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட‌ குருவி!



என் நண்பர்கள் போல் இரைதேடி அலைந்து
களைப்புற்று கூடு திரும்பி
என் மனைவி மக்களுடன் உண்டு குடித்து மகிழ்ந்து
அவர்கள் உண்பதை ரசித்து; க‌ர்வ‌ப்ப‌ட்டு
பின் ப‌றந்து மாலை வேளை உணவு தேடி
மீண்டும் மீண்டும் க‌ளைப்புற்று ,என்
கூடு திரும்ப‌ என‌க்கும் ஆசை தான்
ஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட குருவி!


இவ் விண்வெளி எங்கும் ப‌ற‌ந்து
க‌ண்ட‌ம் விட்டு க‌ண்ட‌ம் தாண்டி
அளாவ‌ளாவி சிலிர்ப்புற்று,
ம‌லை மேடு முகில் தாண்டி
ச‌ம‌த‌ரைக‌ள் எங்கும் ப‌ற‌ந்து திரிந்து
இய‌ற்கையை ர‌சித்து இன்ப‌த்தில் திழைத்து
இதமாய் பொழுது போக்க என‌க்கும் ஆசைதான்,
ஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட‌ குருவி!



இவ் வீட்டின் எஜமான் என்னை வாங்கி வந்தார் ஆசையாய்
தன்னாசை மகள் கேட்டதற்காய், ஆனால்
அவ‌ரோ அறிந்திருக்க‌வில்லை என்னாசை
ப‌ற‌க்கும் ஆசை என‌. ஏனெனில்;
நானோ கூண்டுக்குள் அடைப‌ட்ட‌ குருவி!




தாய் சொன்னார் போதும் இச் சிறு கூடு என‌
ம‌க‌ள் சொன்னார் இல்லை இன்னும் பெரிதாய் வேண்டும்
என் குருவி சுத‌ந்திர‌மாய் ந‌ட‌மாட‌ என
எது என் சுத‌ந்திர‌ம்???..... தெரியாத‌
இவ் வேடிக்கை ம‌னித‌ர்க‌ளுக்காக‌
வேடிக்கை பொருளாகிவிட்ட‌ நானோ;
கூண்டுக்குள் அடைப‌ட்ட‌ குருவி!

வெள்ளி, செப்டம்பர் 04, 2009

என் மனதில் பட்டவை - 01



வீதியில் சுடப்பட்டு கிடக்கின்றான் ஈனத்தமிழன்
முகாம்களில் கற்பழிக்கப்படுகின்றனர்

இளம் பெண்கள்; உண்மைகள் மறைக்கப்பட்டு
வெறும் பத்திரிகைகளில் மட்டும் சிரித்தபடி
மனிதநேயம்!




***


வக்கேஷன்க்கு வந்த குழந்தைக்கு
கைகளில் நுளம்பு கடித்ததற்காக
மனைவியை திட்டுகிறான் கணவன்
கைகளை இழந்த நிலையில்
அகதி முகாம்களில் எம் குழந்தைகள்!

***



3:1 ஆகி விட்ட விகிதாசார பரம்பல்
கோடிப் பணமும் மாடி வீடும் கேட்டபடி
கலியாணச் சந்தையில் ஆண்கள்!



***

குறிப்புப் புத்தகங்களை தூக்கியபடி
அலைந்து கொண்டிருந்தாள் தாய்
பாட‌ப் புத்த‌க‌ங்க‌ளை தூக்கி எறிந்த‌
த‌ன் ம‌க‌னிற்காக‌!


***


என் தாய் நாட்டிற்கு நிக‌ர்
எதுவும் உண்டே இவ் வுலகில்?
ஒவ்வொரு புல‌ம் பெய‌ர் வாசியின்
மனங்களிலும் சிக்கித் தவிக்கின்றது ஏக்கம்!

***

ஜனநாயக நாட்டில்
பள்ளிகளில் கேட்கப் படுகின்றன
ஜாதிச் சான்றிதழ்!




பி.கு: குறிப்புப் புத்தகம் = ஜாதகப் புத்தகம்




புதன், ஜூலை 01, 2009

Exam Tension…


கடுகதி ரயில் ஓட்டம் ஓடிக் கடந்து
விநாடி முட்கள் நகர அவசர அவசரமாக‌
உண்டு குடித்து கடைசி நொடிப் பொழுது கூட‌
மறவாமல் புத்தகம் விரித்து மன‌க் கணிதம் படித்து



பல‌ Bus போக ஒரு Bus பிடித்து
பரீட்சை மண்டபம் நுழைந்து
Index No தேடிப் பிடித்து seatல் உட்கார‌
Exam Sheet சகிதம் வாத்தியார் வர‌
இதயம் நடை பயிலும் நெஞ்சாங் கூட்டில்


6 மாதம் படித்த படிப்பு
1/2 நாளில் அரங்கேறும் கூத்து
சந்தோஷமாக பாதி சந்தேகமாக பாதி
வாத்தியார் கையில் திணித்து
அத‌ன் பின் சுற்றும் முற்றும் பார்த்து
தெரிந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு Hi சொல்லி
Bye சொல்லி மீண்டும் வ‌ந்தேன் அதே
க‌டுக‌தி ர‌யில் ஓட்ட‌ம்!