செவ்வாய், டிசம்பர் 15, 2009

இவ‌ர்க‌ளுக்கான‌ ந‌ம‌து ப‌தில் தான் என்ன‌?









எங்கே நாம்?



எனக்கு தெரியவில்லை சத்தியமாய்



எம்மை போன்று சிறுவர்கள் தாம் இவர்களும்



ஆனால் வாழ்வியலோ வேறு










 காலில் ஆணி குத்தி விட்டதோ


அலறி அடிக்கின்றோம் ஐயோ அம்மா!



கையில் கறண்ட் அடித்து விட்டதோ


பதறித் துடிக்கின்றோம் சில நிமிடங்கள் தனும்










ஆனால் இங்கோ,





வாழ்க்கையே முள்ளுக் கம்பிகளாய் இவர்களுக்கு!







துள்ளித் திரிய வேண்டிய வயதில்



கையில் பிச்சைப் பாத்திரம்










அன்றாட உணவுக்கோ



அனுதினமும் அல்லல் படும் நிலை










TV யில் அருவ‌ருப்பான‌ ஒரு காட்சியா?



அருவ‌ருக்கிற‌து எங்க‌ளுக்கு உண‌வும் சேர்ந்து








அன்றாட‌ உண‌வு அதிக‌மாகி விட்ட‌தா?



திற‌ந்து கிட‌க்கிற‌து குப்பைத் தொட்டி









அப்பொழுதெல்லாம் இவ‌ர்க‌ள் எம‌க்கு தூர‌மாகிப் போய்விடுகிறார்க‌ளா???










வேற்றுமை கூடாது தான்


ஆனால் என‌க்கு ச‌த்தியமாய் புரிய‌வில்லை!


க‌ட‌வுளே எங்க‌ளிட‌த்தில் வேற்றுமை பாராட்டுகிறாரா என்ன‌?


ஏன் இவ‌ர்க‌ளை வேற்றுமையாய் ப‌டைத்து விட்டார்?
 
 
 








 
ஒரு நிமிட‌ம் இவ‌ர்க‌ளுக்காக‌ சிந்திப்போமா?