சனி, ஆகஸ்ட் 08, 2009

அக்கா அண்ணா நம்மள கொஞ்சம் நினைச்சுப் பாருங்க!







சொந்த நாட்டில் அகதிகள் நாம்
சொல்லொண்ணா துயரம் அது நம் சொத்துக்கள் தாம்


பட்டினி வாழ்வு அது இப்போ எம்முடன் தான்
பகலும் இரவும் நம் பொழுது இப் படலைகளில் தான்


சுத்தமான தண்ணீர் அது நாம் கண்டு கன நாளாச்சு
சுகந்த வாழ்வு அது இனி எமக்கு கணவில் தான்


அப்பா அம்மா அவர்கள் எங்கே அடுத்த முகாமிலா?
ஆமிக்காரன் சொன்னான் நாம் இனி அனாதைகளாம்?


வெளியில் இருக்கும் அக்கா அண்ணா நம்மள கொஞ்சம்

நினைச்சுப் பாருங்க

வேற்றுக் கிரக மனிதரில்லை நாமும் உங்கள் உடன் பிறப்புக்கள்

தான்!

செவ்வாய், ஜூலை 14, 2009

உன் மெளனங்களின் மொழி...





உன் மெளனங்களை எல்லாம் மொழி பெயர்த்தேன்

அட அதில் என் பெயர் மட்டும் தான் ஒலித்துக்

கொண்டிருந்தது!







இன்று காதல் தேசத்தின் பெருவிழாவாம்

ஆமாம் இன்று தான் நீ முதன் முதலில் காதலில்


நுழைந்த நாளாம்...









உன் முகத்தில் இத்தனை வானிலை மாற்றங்களா?


காரணம் காதல் தானோ?

சனி, ஜூலை 04, 2009

நீ வாழ நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்!





எனது தோழி ஒருவரின் ஒரு வருட திருமண விழா அண்மையில் கொண்டாடப் பட்டது. என்க்கு இவ் வலை உலகை அறிமுகம் செய்து வைத்த அன்புத் தோழி. அன்றைய தினம் எனக்கு அவரை வாழ்த்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனாலும் நாட்கள் கடந்தாலும் அன்பு குறையவில்லை தானே? அதனால் இன்று வாழ்த்துகிறேன். அவரின் வாழ்வில் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் வாழ வேண்டுமென்று இச் சந்தோசமான தருணத்தில் என்னோடு சேர்ந்து நீங்க‌ளும் வாழ்த்துக்கள் நண்பர்களே!




திருமண பந்தம் அது நம் சொர்க்கத்தின்
சொந்தம்
நலம் வாழ நீர் வாழ வாழ்த்துகிறேன்
நான் இங்கு



உன் அகம் செழிக்க‌
உன் மனை சிறக்க‌
உள்ளும் புறமும்
உன் மனம் மகிழ‌
வாழ்க நீ பல்லாண்டு


உன் சொந்தம் நாம் கண்டு
உன் இல்லம் மகிழ்வுண்டு
பதினாறும் பெற்று பெருவாழ்வு
நீ வாழ வாழ்த்தும் இவள்

உனதன்பு நண்பி

புதன், ஜூலை 01, 2009

Exam Tension…


கடுகதி ரயில் ஓட்டம் ஓடிக் கடந்து
விநாடி முட்கள் நகர அவசர அவசரமாக‌
உண்டு குடித்து கடைசி நொடிப் பொழுது கூட‌
மறவாமல் புத்தகம் விரித்து மன‌க் கணிதம் படித்து



பல‌ Bus போக ஒரு Bus பிடித்து
பரீட்சை மண்டபம் நுழைந்து
Index No தேடிப் பிடித்து seatல் உட்கார‌
Exam Sheet சகிதம் வாத்தியார் வர‌
இதயம் நடை பயிலும் நெஞ்சாங் கூட்டில்


6 மாதம் படித்த படிப்பு
1/2 நாளில் அரங்கேறும் கூத்து
சந்தோஷமாக பாதி சந்தேகமாக பாதி
வாத்தியார் கையில் திணித்து
அத‌ன் பின் சுற்றும் முற்றும் பார்த்து
தெரிந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு Hi சொல்லி
Bye சொல்லி மீண்டும் வ‌ந்தேன் அதே
க‌டுக‌தி ர‌யில் ஓட்ட‌ம்!

வெள்ளி, ஜூன் 19, 2009

எனக்கென்றொரு தேவதை...




உன் வாசம் வீசும் பாதையில் தான்

என் சுவாசம் செல்ல துடிக்கின்றது...





ஒரு நொடிப் பொழுது கூட எனக்கு வேண்டாம்

உன் கண்ணிமைப் பொழுதென்றை தவிர‌...





வாழத்துடிக்கிறேன் இல்லையேல் செத்து போகிறேன்

உன் காதல் கடலில்...





த‌ங்க‌த்தை விட‌ வைர‌ம் விலை உயர்ந்த‌தாமே

யார‌டி சொன்னார்க‌ள் உன் பெருமை

அறியாதவர்கள்...



எவ் ந‌கையும் சிற‌க்க‌வில்லைய‌டி என‌க்கு

உன் புன்னகையை தவிர‌...





வியாழன், ஜூன் 18, 2009

மதம் (இது யானைக்கு பிடிப்பது)


அன்பே சிவம் அருள் உரைத்தார் ஆதி சிவன்


உன்னைப் போல் உன் அயலவனையும் நேசி வாழ்ந்து காட்டினார் இயேசு பிரான்


அயலவன் பசித்திருக்க நீ உணவருந்தாதே மொழிந்து சென்றார் நபிகள் நாயகம்


உயிர்களை கொல்லாதே போதனை செய்தார் கொளதம புத்தர்




1992 ஒக்டோபர் 6 பாபர் மசூதி இடிப்பு. கலவர பூமியாக மாறிப் போனது இந்திய பூமி. மத ஒற்றுமையும் மனிதநேயமும் அற்றுப் போன கறுப்புநாள்.


நைஜீரியாவில் கிறீஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் நடந்த மதக் கலவரத்தில் 420 க்கும் அதிகமானோர் பலி.


குஜராத் மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பலி ,50 க்கும் மேற்பட்ட அப்பாவி ராமபக்தர்கள் பலி.



பெளத்தநாடென்று கூறிக்கொண்டு நாய் பூனைகள் போன்று பொதுமக்கள் படுகொலை.



புரிய‌வில்லை என‌க்கு ஒன்றும்...

சனி, மே 16, 2009

எல்லாம் காதலினால்...





உன் நினைவுகளை சுமந்த படி தான்

எப்பொழுதும் என் இதயம்..








உன் அன்பு பேச்சுக்களை மட்டுமல்ல‌

உன் கோப வார்த்தைகளையும் தான்

ரசிக்கிறது என் மனது...






இப்பொழுதே கனவு கான ஆரம்பித்து விடுகிறேன்

உன்னை எப்படியெல்லாம் பெரிய ஆள் ஆக்க

வேண்டுமென்று!








உன் சிரிப்பு

உன் கோபம்

உன் பாசம்

உன் பந்தம்

ஐயோ உன்னை முழுவதுமாக பிடித்து போகின்றதே


எனக்கு







நீ ஒவ்வொரு முறையும் என்னவென்று கேட்கும்

போதெல்லாம் எனக்கு மறந்து போய் விடுகின்றது

நான் என்னவெல்லாம் உன்னிடம் பேச வேண்டுமென்று ?







எப்பொழுதும் உன்னிடம் மட்டும் தான்

பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்று அழிச்சாட்டியம்

பண்ணும் மனதை நான் என்ன செய்வது?









எல்லாவற்றையும் உன்னிடம் தான் சொல்ல வேண்டும்



துடிக்கிறது என் இதயம்...