திங்கள், ஜூலை 26, 2010

சிலிர்த்துக் கொள்கிறேன் காத‌லை நினைத்து!காத‌லித்த‌வுட‌ன் காண்போரில் எல்லாம்


காத‌லியின் உருவ‌ம் வ‌ந்து போகும்


சினிமா பித‌ற்ற‌ல்களைப் பார்த்து சிரித்துக்


கொண்ட‌து அந்த‌க் கால‌ம்; ஆனால் உன்னைக்


காத‌லித்த‌ பின்பு எல்லோர் முக‌ங்க‌ளும் நீ போல் தோன்ற‌


சிலிர்த்துக் கொள்கிறேன் காத‌லை நினைத்து!

நான் நீ காதல்!உன்னை நினைத்துக் கொண்டிருப்ப‌தாலேயே

வீணாக‌ப் போகின்ற‌தென் வாழ் நாட‌க‌ள்

என‌ திட்டுப‌வ‌ர்க‌ளுக்கெல்லாம் புரிய‌வா போகின்ற‌து

என்னை வாழ‌ வைத்துக் கொண்டிருப்ப‌தே உன் நினைவுக‌ள் தானென்று!

இதயமே இல்லையா காதலுக்கு?

இதயமே இல்லையா காதலுக்கு?


இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே;

வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்!

செவ்வாய், டிசம்பர் 29, 2009

தவிப்பு!

பொய் சொல்கிறவனும் சந்தர்ப்பவாதியும்

தொடர்ந்து ஜெயிக்கும் இவ் வுலகில்

கடவுளையும் உண்மையையும்

தேடித் தேடியே களைத்துப் போனான்

அப்பாவி நியாயஸ்தன்!

வியாழன், டிசம்பர் 24, 2009

வார‌ம் ஒரு ஹைக்கூ!

கிறீஸ்து பிறப்பு

டிசம்பர் 25குடும்பத்தில் அடுக்கடுக்காய்

குழந்தைகள் இறந்து போயின‌

சுனாமியின் கோரம்;இத்தனை வருடங்கள் கழிந்தும்

கிறிஸ்துமஸ் கொண்டாடுவதா இல்லையா?

கிறீஸ்தவ குடும்ப‌த்தில்

இன்னமும் திண்டாட்டம்!

புதன், டிசம்பர் 16, 2009

வாரம் ஒரு ஹைக்கூ!


நிரந்தர முகவரி;

விண்ணப்ப படிவத்தில் நிரப்பும் போதெல்லாம்

வலித்தது வாடகை வீட்டில் குடியிருப்பவனின்

மனம்!

செவ்வாய், டிசம்பர் 15, 2009

இவ‌ர்க‌ளுக்கான‌ ந‌ம‌து ப‌தில் தான் என்ன‌?

எங்கே நாம்?எனக்கு தெரியவில்லை சத்தியமாய்எம்மை போன்று சிறுவர்கள் தாம் இவர்களும்ஆனால் வாழ்வியலோ வேறு


 காலில் ஆணி குத்தி விட்டதோ


அலறி அடிக்கின்றோம் ஐயோ அம்மா!கையில் கறண்ட் அடித்து விட்டதோ


பதறித் துடிக்கின்றோம் சில நிமிடங்கள் தனும்


ஆனால் இங்கோ,

வாழ்க்கையே முள்ளுக் கம்பிகளாய் இவர்களுக்கு!துள்ளித் திரிய வேண்டிய வயதில்கையில் பிச்சைப் பாத்திரம்


அன்றாட உணவுக்கோஅனுதினமும் அல்லல் படும் நிலை


TV யில் அருவ‌ருப்பான‌ ஒரு காட்சியா?அருவ‌ருக்கிற‌து எங்க‌ளுக்கு உண‌வும் சேர்ந்து
அன்றாட‌ உண‌வு அதிக‌மாகி விட்ட‌தா?திற‌ந்து கிட‌க்கிற‌து குப்பைத் தொட்டி

அப்பொழுதெல்லாம் இவ‌ர்க‌ள் எம‌க்கு தூர‌மாகிப் போய்விடுகிறார்க‌ளா???


வேற்றுமை கூடாது தான்


ஆனால் என‌க்கு ச‌த்தியமாய் புரிய‌வில்லை!


க‌ட‌வுளே எங்க‌ளிட‌த்தில் வேற்றுமை பாராட்டுகிறாரா என்ன‌?


ஏன் இவ‌ர்க‌ளை வேற்றுமையாய் ப‌டைத்து விட்டார்?
 
 
 
 
ஒரு நிமிட‌ம் இவ‌ர்க‌ளுக்காக‌ சிந்திப்போமா?