செவ்வாய், அக்டோபர் 07, 2008

"வாழ்க்கை வாழ்வதற்கே"


"Life is like a piano,
white keys R happy moments and
Black keys are sad moments
But remember both keys are
Played together to give
Sweet Music in life…………….. "
ஓர் கவிஞரின் அழகான வரிகள் இவை.

வாழ்க்கை என்றால் என்ன?சிலருக்கு அது ஓர் அழகான நீரோடை போன்று இருக்கலாம். சிலருக்கு அது பயங்கரமானதொரு சுனாமியை போன்றும் தோற்றமளிக்கலாம். எனினும் வாழ்க்கையை " இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை, துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை, இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம்" என்ற பாடல் வரிகள் நன்றாகவே உணர்த்தி நிற்கின்றனவல்லவா...?

எனவே இன்றிலிருந்தே உங்கள் கவலைகளை மூட்டை கட்டுங்கள், தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள், உங்களது அழுகை கண்ணீரை துடைத்தெறியுங்கள் வாழ்க்கையை வளமாக வாழ வழி வகுங்கள் ஏனெனில் "வாழ்க்கை வாழ்வதற்கே"

இதோ!............ இதை நான் ஒரு இந்து சமய புத்தகம் ஒன்றின் பின் அட்டை பகுதியிலிருந்து எடுத்தேன், இதை எழுதியவரின் பெயர் அதில் போடப்படவில்லை, எனினும் இந்த வைர வரிகளை நீங்களும் படித்து உங்கள் வாழ்க்கையில் பயனடைய வேண்டும் என்றதொரு நல்நோக்கில் இதை உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன்...


1.மிக மிக நல்ல நாள் - இன்று
2.மிக பெரிய வெகுமதி - மன்னிப்பு
3.மிகவும் வேண்டாதது - வெறுப்பு
4.மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி
5.மிகக் கொடிய நோய் - பேராசை
6.மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
7. கீழ்த்தரமான விஷயம் - பொறாமை
8. ந‌ம்பக் கூடாதது - வதந்தி
9. ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
10. செய்யக் கூடாதது - உபதேசம்
11.உய‌ர்வுக்கு வழி - உழைப்பு
12. நழுவ‌ விடக் கூடாதது - வாய்ப்பு

நன்றி.


திங்கள், அக்டோபர் 06, 2008

யாமறியோம் பராபரமே!



யார் துடைப்பார் இத் துயரை
எவ்வழி காண்போம் நம் உறவை
காணாமற் போதல் கதையாகிப் போன
எம் தேசத்தில்
எத்தனை வழிகளில் முயன்றோம்
அத்தனையும் பொய்யெனவே ஆயினவே,

மனுக்கொடுத்தோம் புகார் புரிந்தோம் -
இருந்தும்
மனுநீதிச் சோழனில்லையே நம் நாட்டில்

விடிய விடிய காத்திருந்தும்
விடியவில்லையே எம் பொழுது

ஒரு தாயின் விசும்பல்
ஒரு தாரத்தின் கதறல்
ஒரு குழந்தையின் கண்ணீர்
ம்........யாருக்கு அது வேண்டும் இப்
யு(பு)த்த பூமியில் ???

ஏன் எதற்கு என்ற கேள்வியில்லை
நாம் கேட்டால் அது நன்றும் இல்லை
யார் புரிவார் இச் செயலை
யாமறியோம் பராபரமே!

சனி, ஜூன் 07, 2008

ஏனோ.................?


65610 சதுர km பரப்பளவே கொண்ட அழகிய
குட்டித் தீவு நீ,
இந்து சமுத்திரத்தின் நித்திலம் நீ,
இயற்கை துறைமுகத்தால் புகழ் பெற்று விளங்கும்,
கேந்திர மத்திய நிலையமும் நீ.

ஆசியாவிலேயே எழுத்தறிவு வீதத்தில் உனக்கு
தனிச்சிறப்பு,
உலகிலேயே கண்தானம் செய்வதிலும் உனக்கு
முதற்சிறப்பு.

காசியப்பன் ஆண்ட பூமி நீ,
கருணை நிறை புத்த மதம் உன் தார்மீகம்.

விபுலானந்த அடிகள் பிறந்ததும் இங்கே தான்,
அன்பு நிறை யோசவ்வாஸ் மாமுனி மறை
பரப்பியதும் உன்னில் தான்.
கிரிக்கெட்டில் புகழ் உனக்கு,
பெரும் தோட்ட தேயிலை பயிர்ச் செய்கை
பலம் உனக்கு.


மாணிக்க கல் விளையும் பூமி நீ,
மலை வளங்களும் உன்னில் பிரமாதம்.

இவை எல்லாம் கொண்டு சிறப்புற்று
விளங்கும் நீ,,,

கொலைகளும் தற்கொலைகளும் மலிந்த,
இரத்த ஆறு கரைபுரண்டோடும்
ஓர் யுத்த பூமியாகவே எல்லோராலும்
அறியப்படுகின்றாயே அது ஏனோ........?

திங்கள், மே 05, 2008

மீண்டும் வந்துவிடாதே!


உற்றார் இழந்து உறவு இழந்து
இருக்கும் சுற்றமும் இழந்து
கண்ணீர் மட்டும்
எஞ்சிவிட்ட நிலையில்
கதறி நிற்கின்றார்கள்
எம் மக்கள்
இன யுத்தம் ஓய்ந்து
இரத்தம் இல்லா சாந்தி வரும் நிலையில்
மீண்டும் ஒரு கடல் யுத்தம்
என்ன சொல்லி தேற்றுவது
வார்த்தை வருமுன்னே
வந்து நிற்கிறதே அழுகை
ஒன்றா இரண்டா
ஓராயிரம் உடல்கள்
என்னவாயிற்று
ஐயோ இந்த பூமிக்கு....?
கொள்ளி வைக்க வேண்டிய கைகள்
கொல்லப்பட்டனவோ,
துள்ளி குதித்து விளையாட வேண்டிய கால்கள்
துண்டாடப்பட்டனவோ,
பூவாக இருக்க வேண்டிய இதயங்கள்
புதைக்கப்பட்டனவோ,
இன்னும் எத்தனை எத்தனை
உயிர்கள்!
அத்தனையும் ஒரு நொடிப் பொழுதில்
சித்தம் என அழித்து விட்டாயே
எதற்காய்...........?
அஸ்தி கரைப்பதும்
ஆனந்தக் கூத்தாடுவதும்
கக்ஷ்டம் போக்க கடல்
மீன்கள் பிடிப்பதுவும்
எம் வசந்த காலத்து வரலாறுகளாய்
இன்னும் இதமாக இருக்க
அலை கொண்டு எம்மை
அலைக்கழித்தது ஏனம்மா....?
அன்று நீ இவர்களுக்கு
செல்லப்பிள்ளையாய் இருந்து விட்டு
இன்று மட்டும் எதற்காய்
கொல்லும் பிள்ளையாய் மாறிவிட்டாய்?
சமுத்திரம் என்றழைத்த
மக்கள் மனதில் - இன்று நீ
சாகும் அஸ்திரம் போலல்லவா
ஆகிவிட்டாய்....?
"சுனாமி" என்று உன்னை அழைக்கிறார்களே,
நாங்கள் சுவாமியாக நினைத்து
கேட்கிறோம் - வந்து விடாதே
மீண்டும் எம் நாட்டுக்கு.


செவ்வாய், ஏப்ரல் 29, 2008

தமிழீழ தா(ய)கம்

உணர்வுகளை கொன்றனர்;
உரிமைகளை பறித்தனர்;
உண்மைகளை மறைத்தனர்;

தழிழர் எம்மை ஏனோ வெறுத்தனர் - இத்
தரணியில் எமக்கு இடமில்லை என்றனர்

தாய் என்று அழைத்த பூமி
தகனப் பலி எம்மை கேட்க;

தவித்து நிற்கின்றோம் தனிமரமாய்
தாயகம் எமக்கு கிடைக்கும் என்றோ......?

திங்கள், ஏப்ரல் 21, 2008

என் காதல்............


உன் முகத்தை கூட என்னால் முழுமையக பார்க்க முடிவதில்லை உன் மீதான என் காதலால்;

எங்கோ தூரத்தில் கேட்கும் உன் குரலால் தொலைந்து போகும் என் நிஜங்கள்;

எப்பொழுதும் உன் வருகைக்காக தவமிருக்கும் என்
விழிகள்;

உன் மீதுள்ள அத்தனை காதலையும் பொத்தி வைத்திருக்கிறேன் பொக்கிஷமாய்;
என்றாவது ஒரு நாள் அது உன்னைச் சேரும்
என்ற நம்பிக்கையில்...


வெள்ளி, ஏப்ரல் 18, 2008

பா(ர்)வை மொழி...


தெரியாத மொழிகளில் எல்லாம் கவிதை கேட்டு
புரிந்த என் மனதுக்கு;

ஒரே ஒரு கவிதை மட்டும் இன்னும் புரியவில்லையடி;
அது உன் கண்கள் பேசும் கவிதை.............