புதன், ஜூலை 01, 2009

Exam Tension…


கடுகதி ரயில் ஓட்டம் ஓடிக் கடந்து
விநாடி முட்கள் நகர அவசர அவசரமாக‌
உண்டு குடித்து கடைசி நொடிப் பொழுது கூட‌
மறவாமல் புத்தகம் விரித்து மன‌க் கணிதம் படித்து



பல‌ Bus போக ஒரு Bus பிடித்து
பரீட்சை மண்டபம் நுழைந்து
Index No தேடிப் பிடித்து seatல் உட்கார‌
Exam Sheet சகிதம் வாத்தியார் வர‌
இதயம் நடை பயிலும் நெஞ்சாங் கூட்டில்


6 மாதம் படித்த படிப்பு
1/2 நாளில் அரங்கேறும் கூத்து
சந்தோஷமாக பாதி சந்தேகமாக பாதி
வாத்தியார் கையில் திணித்து
அத‌ன் பின் சுற்றும் முற்றும் பார்த்து
தெரிந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு Hi சொல்லி
Bye சொல்லி மீண்டும் வ‌ந்தேன் அதே
க‌டுக‌தி ர‌யில் ஓட்ட‌ம்!

வெள்ளி, ஜூன் 19, 2009

எனக்கென்றொரு தேவதை...




உன் வாசம் வீசும் பாதையில் தான்

என் சுவாசம் செல்ல துடிக்கின்றது...





ஒரு நொடிப் பொழுது கூட எனக்கு வேண்டாம்

உன் கண்ணிமைப் பொழுதென்றை தவிர‌...





வாழத்துடிக்கிறேன் இல்லையேல் செத்து போகிறேன்

உன் காதல் கடலில்...





த‌ங்க‌த்தை விட‌ வைர‌ம் விலை உயர்ந்த‌தாமே

யார‌டி சொன்னார்க‌ள் உன் பெருமை

அறியாதவர்கள்...



எவ் ந‌கையும் சிற‌க்க‌வில்லைய‌டி என‌க்கு

உன் புன்னகையை தவிர‌...





வியாழன், ஜூன் 18, 2009

மதம் (இது யானைக்கு பிடிப்பது)


அன்பே சிவம் அருள் உரைத்தார் ஆதி சிவன்


உன்னைப் போல் உன் அயலவனையும் நேசி வாழ்ந்து காட்டினார் இயேசு பிரான்


அயலவன் பசித்திருக்க நீ உணவருந்தாதே மொழிந்து சென்றார் நபிகள் நாயகம்


உயிர்களை கொல்லாதே போதனை செய்தார் கொளதம புத்தர்




1992 ஒக்டோபர் 6 பாபர் மசூதி இடிப்பு. கலவர பூமியாக மாறிப் போனது இந்திய பூமி. மத ஒற்றுமையும் மனிதநேயமும் அற்றுப் போன கறுப்புநாள்.


நைஜீரியாவில் கிறீஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் நடந்த மதக் கலவரத்தில் 420 க்கும் அதிகமானோர் பலி.


குஜராத் மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பலி ,50 க்கும் மேற்பட்ட அப்பாவி ராமபக்தர்கள் பலி.



பெளத்தநாடென்று கூறிக்கொண்டு நாய் பூனைகள் போன்று பொதுமக்கள் படுகொலை.



புரிய‌வில்லை என‌க்கு ஒன்றும்...

சனி, மே 16, 2009

எல்லாம் காதலினால்...





உன் நினைவுகளை சுமந்த படி தான்

எப்பொழுதும் என் இதயம்..








உன் அன்பு பேச்சுக்களை மட்டுமல்ல‌

உன் கோப வார்த்தைகளையும் தான்

ரசிக்கிறது என் மனது...






இப்பொழுதே கனவு கான ஆரம்பித்து விடுகிறேன்

உன்னை எப்படியெல்லாம் பெரிய ஆள் ஆக்க

வேண்டுமென்று!








உன் சிரிப்பு

உன் கோபம்

உன் பாசம்

உன் பந்தம்

ஐயோ உன்னை முழுவதுமாக பிடித்து போகின்றதே


எனக்கு







நீ ஒவ்வொரு முறையும் என்னவென்று கேட்கும்

போதெல்லாம் எனக்கு மறந்து போய் விடுகின்றது

நான் என்னவெல்லாம் உன்னிடம் பேச வேண்டுமென்று ?







எப்பொழுதும் உன்னிடம் மட்டும் தான்

பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்று அழிச்சாட்டியம்

பண்ணும் மனதை நான் என்ன செய்வது?









எல்லாவற்றையும் உன்னிடம் தான் சொல்ல வேண்டும்



துடிக்கிறது என் இதயம்...













செவ்வாய், ஏப்ரல் 14, 2009

சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!


விரோதியே வருக‌
விமோச்சனம் தருக‌

பரிதவிக்கும் எம் மக்கள்
பாரங்கள் களைக‌

எரிதியாய் குரோதியாய்
எமை எரிக்கும் நிலை நீங்கி

சரி சமனாய் சமத்துவமாய்
சாதிக்கும் வரம் அருள்க‌

புத்தாண்டே துணை செய்க!
புதுஆண்டே துணை புரிக!


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

ஞாயிறு, ஏப்ரல் 12, 2009

சித்திரை புத்தாண்டுக்கு முந்திய சில கேள்விகள்...?(இது சரியா... இல்லை தவறா...?)





இன்னும் இரு தினங்களில் புது வருடம். தமிழ்-சிங்கள புதுவருடம்.உலகிலுள்ள அனைத்து தமிழர்களும் குறிப்பாக இலங்கையில் சிங்கள மக்களும் தமது புத்தாண்டை வரவேற்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இதேவேளை புதிதாக அனைத்து தமிழ் மக்களிடமும் எழுந்துள்ள ஒரு கேள்வி தமிழர்களுடைய புதுவருடம் தையிலா...? அல்லது சித்திரையிலா என்பது தான்? கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆரம்பித்து வைத்த இக் கேள்வியை இன்றைய பதிவர் கமல் வரை கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள்? இக் கேள்விக்கான பதிலை ஒரு சாரார் தையில் தான் தமிழர்களுடைய புது வருடம் கொண்டாடப் பட வேண்டுமென்றும் ஒரு சாரார் இல்லை இல்லை பழமையை என்றும் மாற்றுதல் ஆகாது சித்திரையில் தான் கொண்டாடப் பட வேண்டும் என்றும் தமது வாக்குகளை குத்திக் முகொண்டிருக்கும் இதே வேளை கத்துக்குட்டியாகிய நானும் (மன்னிச்சுக் கொள்ளுங்க) இதைப் பற்றிய எனது கருத்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம் என்று ஆவலாக உள்ளேன்...


முதலில் தை...



தனித்திருத் திங்கள் தரணியில் தோன்ற‌
தைமகள் தான் அவதரிக்க‌
தமிழர் நாம் குதூகலிக்க‌
வாராயோ நீ மீண்டும் நலம் தாராயோ
எம் பொழுதும் எப் பொழுதும்
ப‌க‌ல‌வ‌ன் தான் வான் சிற‌க்க
கொண்டாடுவோம் இங்கு நாம் ப‌ண்பாடுவோம்
தை ம‌க‌ளை த‌மிழ் ம‌க‌ளாய்!





தை மாத‌ம் த‌மிழ‌ர்க‌ள் எம‌க்கு பொன்னான‌ மாத‌ம். தை பிற‌ந்தால் த‌மிழ‌ர் எம‌க்கு வ‌ழி பிற‌க்கும் என்று கூறுவார்க‌ள். அதிகாலைச் சூரிய‌ன் த‌ன் பொற் க‌ர‌ங்க‌ளை விரிக்க‌ சேவ‌ல் கூவி நாம் துயில் எழும்ப‌ ஆல‌ய‌க் கோயில்க‌ளில் ம‌ணி ஓசைக‌ள் முழ‌ங்க‌ த‌மிழ‌ர்க‌ளாகிய‌ நாம் வ‌ய‌ல் வ‌ர‌ம்புக‌ளில் இறங்கி நெற் க‌திரிக‌ளை அறுவ‌டை செய்து அரிசி எடுத்து க‌ரும்பும் நாட்டி பொங்க‌ல் பொங்கி சாமிக்கும் ப‌டைத்து அப்ப‌ப்பா... தை மாத‌ம‌ல்ல‌வோ அழ‌கிய‌ த‌மிழ் மாத‌ம். எங்கும் எதிலும் ம‌கால‌ட்சுமி க‌டாட்ஷ‌ம், பொங்கும் ம‌ல‌ரும் ம‌ங்க‌ளக‌ர‌ம். ந‌ம‌ஸ்கார‌ மாத‌ம் வ‌ண‌க்க‌த்துக்குரிய‌ எங்க‌ள் தை மாத்‌ம். எனவே இவ்வளவு நண்மை பயக்கும் தை மாதம் தானே எங்களுக்கு புதுமை படைக்கும் மாதம் புது மாதம் அதாவது புது வருட மாதமன்றோ?




ஆனாலும் சித்திரை...



சித்திரைப் பெண் சிரிக்கின்றாள் த‌ன் முக‌ம் ம‌ல‌ர்ந்து
எத் திசையும் ந‌ற் திசையாய் இவ் வ‌ருட‌ம் எம‌க் க‌ருள‌
எக் க‌ண‌மும் எம் துயர்கள் இனி அகல‌
சித்திரையே ந‌ற் த‌ருவே நீடூழி வாழ்க‌ வென்று
சித்திரைப் பெண் சிரிக்கின்றாள் த‌ன் முக‌ம் ம‌ல‌ர்ந்து!





சித்திரை மாத‌ம் வ‌ருட‌த்தில் நான்காவ‌து மாத‌ம். அதாவ‌து ஒரு காலாண்டு க‌ழியும் மாதம். இல‌ங்கையில் நிதியாண்டு தொட‌ங்கும் கால‌ம். க‌த்த‌ரி வெயில் சுட்டெரிக்கும் மாத‌ம். த‌மிழ‌ர்க‌ள் த‌ம் நெற்றி விய‌ர்வை நில‌த்தில் சிந்த‌ க‌ஷ்ட‌ப்ப‌ட்டு உழைக்கும் கால‌ம். ஆனாலும் சிற‌ப்பான‌ மாத‌ம். இல‌ங்கையில் சித்திரை வ‌ந்தாலே அனைவ‌ரின‌து முக‌த்திலும் புன்சிரிப்புக்க‌ள் த‌வ‌ழ‌த் தொட‌ங்கிவிடும். கார‌ண‌ம் விசேட‌ கார‌ண‌ம் ‍ த‌மிழ் ‍ சிங்க‌ள‌ புதுவ‌ருட‌ம். ஏராள‌மான‌ விடுமுறைக‌ள் உண்டு. பாட‌சாலை விடுமுறையும் உண்டு. என‌வே அனைவ‌ரும் குடும்ப‌ ச‌கித‌மாக‌ ஒற்றுமையாக‌ ஒன்று கூடி சுற்றுலா செல்லுத‌ல், விருந்துப‌சார‌ங்க‌ளில் க‌ல‌ந்து கொள்ள‌ல், புத்தாடை அணித‌ல். ப‌ட்டாசு கொளுத்துத‌ல்(இப்ப‌ அனும‌தி த‌ந்திட்டாங்க‌) என ஓரே அமர்க்களமாகத் தான் இருக்கும் இம் மாதம். சித்திரை திங்க‌ள‌ன்றோ சிற‌ப்பான‌ திங்க‌ள் என்று கூற‌ வைக்கும் இம் மாத‌த்தில் அனைவ‌ரின‌து வீடுக‌ளிலும் சித்திரைப் பெண் வ‌ந்து உட்கார்ந்தும் விடுவாள். ஏனெனில் இல‌ங்கையில் இது த‌மிழ் ம‌ட்டும‌ல்ல‌ த‌மிழ்-சிங்க‌ள ம‌ன்னிக்க‌வும் சிங்க‌ள‌-த‌மிழ் புது வ‌ருட‌ம‌ன்றோ!




இல‌ங்கை தான் இன்றைய‌ திக‌தியின் க‌தா நாய‌க‌ன். அத்திப்ப‌ட்டி முருகேசு முத‌ல் அமெரிக்காவின் பில் கேட்ஸ் வ‌ரை இல‌ங்கையைப் ப‌ற்றி இன்றைய‌ திக‌தியில் அறியாத‌வ‌ர்க‌ள் எவ‌ருமே இல்லை என‌க் கூற‌லாம். கார‌ண‌ம் கின்ன‌ஸ் சாத‌னைக‌ள் ஒன்றுமில்லை இல‌ங்கையில் ந‌ட‌க்கும் யுத்த‌ம் கொடூர‌ யுத்த‌ம். இவ் யுத்த‌த்திற்கு ப‌ல்வேறு ப‌ட்ட‌ அர‌சிய‌ல் கார‌ண‌ங்க‌ள் கூற‌ப்ப‌ட்டாலும் உண்மைக் கார‌ண‌ம் இன‌ வேறுபாடு. அதாவ‌து எம‌து ச‌கோத‌ர‌ மொழி ம‌க்க‌ளாகிய‌ சிங்க‌ள் ச‌முதாய‌த்திற்கும் எம‌து த‌மிழ் ச‌முதாய‌த்திற்கும் இடையில் ஏற்ப‌ட்ட‌ ஒரு சிறு பொறி இன்று கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிற‌து. ஆக‌ மொத்த‌த்தில் இது ஒரு இன‌ப் போர், ஒரு இன‌த்திற்கு எதிரான‌ போர் என்றெல்லாம் ப‌ல்வேறு ப‌ட்ட‌ வியாக்கியான‌ங்க‌ளை ப‌ல‌ர் கூறிக்கொண்டிருக்கையில் (ச‌த்திய‌மா நான் இங்க‌ அர‌சிய‌ல் பேச‌ வ‌ர‌லைங்க‌)நான் எடுத்துக் கொண்ட‌ விட‌ய‌ம் இது அல்லவே. நான் இங்கு கூற‌ வ‌ந்த‌து சித்திரைப் பெண்ணை பற்றியன்றோ..., எம‌க்கு வ‌ர‌ப்போகும் புது வ‌ருட‌த்தை பற்றியன்றோ...



அத‌ற்கும் இத‌ற்கும் என்ன‌ ச‌ம்ம‌ந்த‌ம் என்றா கேட்கிறீர்க‌ள்? இருக்க‌வே இருக்கிற‌து ச‌ம்ம‌ந்த‌ம், மிக‌ப் பெரிய‌ ச‌ம்ம‌ந்த‌ம். ஆர‌ம்ப‌ கால‌ங்க‌ளில் ஏற்ப‌ட்ட‌ சிறு சிறு ம‌ன‌க் க‌ச‌ப்புக்க‌ள், கோள் மூட்ட‌ல்க‌ள், பொறாமைக‌ள், ப‌கைக‌ள், விரோத‌ங்க‌ள் போன்ற‌ன‌ எம‌து ச‌கோத‌ர‌ மொழி ம‌க்க‌ளுக்கும் எம‌க்கும் இடையில் ஒரு வித‌மான‌ குரோத மன‌ப்பாண்மை உண்டாக‌ கார‌ண‌மாகி பின்ன‌ர் அது வெறுப்பாகி இன்று அது பாரிய யுத்த‌ம் என்னும் நிலைக்கு இழுத்துச் செல்ல‌ப்ப‌ட்டிருக்கும் நிலையில் எங்க‌ளையும் எங்க‌ள் ச‌கோத‌ர‌ மொழி ம‌க்க‌ளையும் ஒன்று ப‌டுத்தி ஒற்றுமையுட‌னும் பரஸ்பரத்துடனும் புன்னகைக்க‌ வைப்ப‌து இவ் எம‌து சித்திரை புத்தாண்டு தான் என்று கூறினால் மிகையாகாத‌ன்றோ! ந‌ம் இரு இன‌மும் சேர்ந்து கொண்டாடும் ம‌க‌த்தான‌ நாள் அதுவ‌ன்றோ! அட‌ ஆமாங்க‌ அன்றைய‌ நாளில் பூக்கும் அமைதி, சின்ன‌ சின்ன மகிழ்ச்சிகள், புன்சிரிப்புக்கள், ஆல‌ய‌ ப‌ரிசுத்த‌ம், கோயில் ம‌ணி ஓசை,எங்கும் எதிலும் சுபீட்ச‌ம், ச‌ந்தோஷ‌ம், தெய்வீக‌ம் இவை யாவும் ந‌ம் இரு இன‌மும் சேர்ந்து கொண்டாடும் ப‌ண்டிகை என்ற‌தால் ஆன‌த‌ன்றோ? அச் செல்வ‌ம் த‌ரும் சித்திரையை ந‌ம் ந‌ட்புற‌வை கொண்டு வ‌ரும் புத்தாண்டை நாம் தையில் எவ்வாறு மாற்றிய‌மைக்க‌ முடியும்?




உள் நாட்டு போர் வெற்றி தோல்விக‌ளால் அடிக்க‌டி த‌ம‌து முக பாவ‌ங்க‌ளை மாற்றிக் கொள்ளும் எம‌து ச‌கோதர‌ மொழி ந‌ண்ப‌ர்க‌ள் த‌ங்க‌ளுட‌ன் சேர்ந்து நாங்க‌ளும் கொண்டாடும் புது வ‌ருட‌ தின‌த்தில‌ன்றோ உள‌மார‌ சிரிக்கின்றார்க‌ள், சிநேக‌த்துட‌ன் கை குலுக்குகிறார்க‌ள், தோழமையுடன் வாழ்த்துத‌ல்க‌ளை ப‌ரிமாறிக் கொள்கின்றார்க‌ள், பிரிய‌த்துட‌ன் த‌ம‌க்குப் பிடித்த‌மான‌ எம‌து சிற்றுண்டிக‌ளையும் சுவைத்து உண்கின்றார்க‌ள். நாமும் தான் அன்றோ? அன்று தான் அன்றைய‌ நாளில் தான் எம‌க்கும் அவ‌ர்க‌ளுக்குமான‌ இன‌த் துவேச‌ம் காற்றைக் க‌ண்ட‌ இல‌வ‌ம் ப‌ஞ்சைப் போன்று ப‌ற‌ந்தோடி விடுகின்ற‌த‌ன்றோ? எங்கும் எதிலும் ம‌கிழ்ச்சி ச‌ந்தோஷ‌ம் ம‌ட்டும் தான் உண‌ர‌ப் படுகின்ற‌த‌ன்றோ? அவ‌னோ இல்லை அவ‌ளோ சொல்லுகின்றன‌ர் அட‌, இவ‌ர்க‌ள் எம‌து ச‌கோத‌ர‌ மொழி ம‌க்க‌ள். இவ‌ர்க‌ளும் ந‌ம்மை போன்ற‌வ‌ர்க‌ளே. வாருங்க‌ள் எல்லோரும் சேர்ந்து வ‌ர‌வேற்போம் ந‌ம‌து புத்தாண்டை புது ஆண்டை!







*****************************************************************************




இவ்வாறாக‌; ஆனாப் ப‌ட்ட‌ அவுஸ்திரேலியா காட்டுத்தீயையே அழித்து விட்ட‌ ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌ம் இவ் இன‌த் தீயை அழிக்க‌ முடியாம‌ல் மூச்சு முட்டி நிற்கும் இவ் வேளை ஒரு ந‌ல்லிண‌க்க‌த்தை புரிந்துண‌ர்வை ஒற்றுமையை கொண்டுவ‌ரும் இப் புத்தான்டான‌து ந‌ம் இரு இன‌ ம‌க்க‌ளும் சேர்ந்து கொண்டாடுவ‌த‌ற்காக‌ தையில‌ல்ல‌ சித்திரையிலே சிற‌ப்பிப்ப‌தே சால‌ச் சிற‌ந்த‌தாகும் என்ப‌து என் எண்ண‌ம்.






அட‌ எல்லாத்தையும் விட்டு விடுங்க‌ள் சேர‌வே முடியாத‌ இரு வேறுப‌ட்ட‌ இன‌ ம‌க்க‌ளை சேர்த்து வைக்கும் இப் புது வ‌ருட‌ம் சித்திரையில் கொண்டாடினால் தான் என்ன‌? பொன் விளைந்தால் தான் என்ன‌? பொருள் விளைந்தால் தான் என்ன‌? ஒற்றுமையை விளைவிப்ப‌து சித்திரைப் பெண் தான‌ன்றோ?





எல்லாம் ஒரு நாள் மாறும். எமக்கும் அமைதி பிறக்கும். எமது சகோதர இன மக்கள் எம்மை ஒரு நாள் புரிந்து கொள்வார்கள். அந்த நம்பிக்கை எனக்குண்டு. அப்பொழுது நம் இரு இனமும் ஒன்றாக கூடி வரவேற்போம் எமது இனிய புத்தாண்டை. அது வரையிலாவது விட்டுவப்போம் சித்திரைப் புத்தாண்டு சித்திதையில் பிறப்பதை!




**************************************************************************



என்ன‌ நான் சொல்வ‌து? இது என‌து த‌னிப்ப‌ட்ட‌ அபிப்பிராய‌ம் ம‌ட்டுமே. இது ச‌ரியா இல்லை த‌வ‌றா...? நீங்க‌ள் தான் சொல்ல‌ வேண்டும் ந‌ண்ப‌ர்க‌ளே!

ஞாயிறு, மார்ச் 29, 2009

உங்களுக்கு தெரியுமா அவர்கள் என்ன தான் பேசுகிறார்கள்???


"தத்தி தத்தி நடை பயின்று
கொஞ்சும் மொழி பேசி
வட்டமிட்டு வலம் வந்து
தன் அம்மாவின் கன்னத்தில்
'இச்' ஒன்று பதித்திடும்
எம் செல்லக் கண்மணிகளுக்கு..."

ஆமாங்க நான் இங்கு பேச வந்திருப்பது மழலைகளின் மொழி பற்றித் தானுங்க, அந்த ஆண்டவன் படைப்பில் உலகில் ஆயிரம் ஆயிரம் மனிதர்கள் அம் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு சிறப்பு. காதலர்களுக்கு காதல் சிறப்பு, மாணவர்களுக்கு கல்வி சிறப்பு, பெற்றொர்களுக்கு பிள்ளைகள் சிறப்பு, தொழிலாலர்களுக்கு உழைப்பு சிறப்பு. இவ்வாறுள்ள ஆயிரமாயிரம் சிற்ப்புக்களுள் நான் மிகவும் இனிமையானதாகவும் ரசிக்கத் தக்கதாகவும் கருதுவது எம் மழலை செல்வங்களின் கொஞ்சும் மொழியைத் தான்.


பொதுவாக சிறுவயதில் குழந்தைகள் எல்லோருமே அழகாகத் தான் இருப்பார்கள். அவர்களது குறும்புகள் சேஷ்டைகளிற்கு அளவிருக்காது. அவர்களது மழலை மொழி எங்களுக்கு புரியவே புரியாது, ஆனால் அம் மொழியை கேட்கும் போது எங்களுக்கு திகட்டவே திகட்டாது. அத்தனை ஆசையாக இருக்கும் அவர்களது மழலை மொழி. இதை பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?



பொதுவாக ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டால் அது ஆகாரம் சாப்பிடுவதற்கு "நண்ணா" வேனும் என்கிறது, இன்னொரு குழந்தை அதே ஆகாரத்தை "அவ்வா" என்கிறது. எப்படித் தான் கண்டுபிடிக்கிறார்களோ இப்படியொரு அற்புதமான மொழிப் படைப்பை! இதனால் தான் எந்த வள்ளுவனும் குழந்தை அகராதி என்றொண்டை உருவாக்காமலே போயிருப்பானோ?


கண்களால் சிரிப்பதும், வாண்டுத்தனமும், தத்தக்க பித்தக்க போன்ற அவர்களது மொழிப்படைப்பும் அப்பப்பா... அவர்களுக்கே உரிய வர்ணனைகள் அன்றோ?



நான் சில வேளைகளில் நினைப்பதுண்டு இந்த வாண்டுகளைப் பார்த்து எங்களது வாண்டுகள் அதாவது இலங்கை, இந்தியாக் கண்டங்களை சேர்ந்த வாண்டுகள் ண , ந என்றும் சீனா யப்பான் தேசங்களை சேர்ந்த வாண்டுகள் ங, ஞ என்றும் மேற்கு ஜரோப்பிய நாடுகளை சேர்ந்த வாண்டுகள் ஷா, ஷீ என்றும் கதைப்பார்களோ என்று , ஏனெனில் அத்தனை ரசிக்கத் தக்கவை இவர்களது மழலை மொழி. புதிது புதிதாக மொழிகளை உருவாக்க இவர்களால் மட்டும் தான் முடியுமோ என்னவோ?



எனது அக்காவிற்கு ஒரு மகள் இருக்கிறார். ஆள் படு சுட்டி. தேவதை வம்சம் என்றே அவளைப் பார்த்தால் கூறத் தோன்றும். அகன்ற பெரிய கண்களும் வட்ட முகமுமாய் எப்பொழுதும் தூக்கிக் கொஞ்சத் தோன்றும் அழகு உருவம் கொண்ட வாண்டு அவள். எங்கள் எல்லோரினதும் குட்டிப் பிசாசும் அவள் தான். அண்மையில் தான் தனது 2வது வருட பிறந்த தினத்தை(29.03.2009) கொண்டாடி மகிழ்ந்திருந்தாள். ஏன் இந்த குட்டியைப் பற்றி நான் குறிப்பிடுகிறேன் என்றால் இவள் தான் எனது அக்காவின் ஒரே ஒரு செல்ல வாரிசு. இவளை இவளது பெற்றோர் ஒரு பொக்கிஷம் போலவே பாதுகாக்கின்றனர். படு செல்லம் அவளுக்கு. அப்போ இக் குட்டியின் சேஷ்டைகள் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?


நானும் அக்காவும் அடிக்க‌டி உரையாடும் ச‌ந்த‌ர்ப‌ங்க‌ளில் தானும் ஆஜ‌ராகி விடுவா இந்த‌ குட்டி வாண்டு. இந்த‌ குட்டி வான்டுக்கு த‌ன்னைத் தான் த‌ன்னை ம‌ட்டும் தான் க‌வ‌னிக்க‌ வேண்டும். அத‌ற்காக‌ இந்த‌ குட்டி வாண்டு செய்யும் அட்ட‌காச‌ங்க‌ள் ர‌சிக்க‌த் த‌க்க‌வை. இவ‌ளைப் பார்ப்ப‌திலே எங்க‌ள‌து பொழுதுக‌ள் யாவும் க‌ழிந்துவிடும். அவ்வாறான‌ குறும்புக்காரி. இவ‌ர‌து மொழி ர‌சிக்க‌த் த‌க்க‌து. விளையாட்டு க‌ர‌மான‌து. ஆனால் எங்க‌ளுக்கு அது புரிய‌வே புரியாது. ஆனாலும் நாங்க‌ள் தின‌ம் தின‌ம் அதை கேட்டு ர‌சிப்போம். எந்த‌ தித்திப்பான‌ இனிப்புப் ப‌ண்ட‌மும் தோற்றுப் போய்விடும் இம் ம‌ழலைகளின் கொஞ்சும் மொழிக்கு முன்னால். அத்த‌னை அழ‌கு. ஆனால் அம்மொழிக‌ள் எம‌க்கு புரிவ‌தில்லை.



பொதுவாக‌ நாங்க‌ள் எம‌க்குப் புரியாத‌ எதையுமே பெரிதாக‌ ர‌சிப்ப‌தில்லை தானே? ஆனால் ம‌ழ‌லை மொழி எம‌க்கு புரியாத‌ புதிர் என்ற போதிலும் நாம் ர‌சிக்கின்றோம், சிரிக்கின்றோம், ம‌ன‌ நிறைவும் அடைகின்றோம். அது ஏன்? அட‌ உங்க‌ளுக்காவ‌து தெரியுமா அவ‌ர்க‌ள் என்ன‌ தான் பேசிகிறார்க‌ள் என்று...?

***Wish u a Happy Birthday

Sabia Kutty!***