வெள்ளி, ஜூன் 19, 2009

எனக்கென்றொரு தேவதை...
உன் வாசம் வீசும் பாதையில் தான்

என் சுவாசம் செல்ல துடிக்கின்றது...

ஒரு நொடிப் பொழுது கூட எனக்கு வேண்டாம்

உன் கண்ணிமைப் பொழுதென்றை தவிர‌...

வாழத்துடிக்கிறேன் இல்லையேல் செத்து போகிறேன்

உன் காதல் கடலில்...

த‌ங்க‌த்தை விட‌ வைர‌ம் விலை உயர்ந்த‌தாமே

யார‌டி சொன்னார்க‌ள் உன் பெருமை

அறியாதவர்கள்...எவ் ந‌கையும் சிற‌க்க‌வில்லைய‌டி என‌க்கு

உன் புன்னகையை தவிர‌...