சனி, ஆகஸ்ட் 08, 2009

அக்கா அண்ணா நம்மள கொஞ்சம் நினைச்சுப் பாருங்க!சொந்த நாட்டில் அகதிகள் நாம்
சொல்லொண்ணா துயரம் அது நம் சொத்துக்கள் தாம்


பட்டினி வாழ்வு அது இப்போ எம்முடன் தான்
பகலும் இரவும் நம் பொழுது இப் படலைகளில் தான்


சுத்தமான தண்ணீர் அது நாம் கண்டு கன நாளாச்சு
சுகந்த வாழ்வு அது இனி எமக்கு கணவில் தான்


அப்பா அம்மா அவர்கள் எங்கே அடுத்த முகாமிலா?
ஆமிக்காரன் சொன்னான் நாம் இனி அனாதைகளாம்?


வெளியில் இருக்கும் அக்கா அண்ணா நம்மள கொஞ்சம்

நினைச்சுப் பாருங்க

வேற்றுக் கிரக மனிதரில்லை நாமும் உங்கள் உடன் பிறப்புக்கள்

தான்!