வெள்ளி, செப்டம்பர் 04, 2009

என் மனதில் பட்டவை - 01வீதியில் சுடப்பட்டு கிடக்கின்றான் ஈனத்தமிழன்
முகாம்களில் கற்பழிக்கப்படுகின்றனர்

இளம் பெண்கள்; உண்மைகள் மறைக்கப்பட்டு
வெறும் பத்திரிகைகளில் மட்டும் சிரித்தபடி
மனிதநேயம்!
***


வக்கேஷன்க்கு வந்த குழந்தைக்கு
கைகளில் நுளம்பு கடித்ததற்காக
மனைவியை திட்டுகிறான் கணவன்
கைகளை இழந்த நிலையில்
அகதி முகாம்களில் எம் குழந்தைகள்!

***3:1 ஆகி விட்ட விகிதாசார பரம்பல்
கோடிப் பணமும் மாடி வீடும் கேட்டபடி
கலியாணச் சந்தையில் ஆண்கள்!***

குறிப்புப் புத்தகங்களை தூக்கியபடி
அலைந்து கொண்டிருந்தாள் தாய்
பாட‌ப் புத்த‌க‌ங்க‌ளை தூக்கி எறிந்த‌
த‌ன் ம‌க‌னிற்காக‌!


***


என் தாய் நாட்டிற்கு நிக‌ர்
எதுவும் உண்டே இவ் வுலகில்?
ஒவ்வொரு புல‌ம் பெய‌ர் வாசியின்
மனங்களிலும் சிக்கித் தவிக்கின்றது ஏக்கம்!

***

ஜனநாயக நாட்டில்
பள்ளிகளில் கேட்கப் படுகின்றன
ஜாதிச் சான்றிதழ்!
பி.கு: குறிப்புப் புத்தகம் = ஜாதகப் புத்தகம்